Saturday, 12 March 2011

ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம்



டோக்கியோ: ஜப்பானை புரட்டிப்போட்டு நிலைகுலைய செய்துள்ள நிலையில் இங்குள்ள அணு மின் மையத்தில் இருந்து அழுத்தம் காரணமாக வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இது பெரும் அச்சம் தரும் விஷயமல்லை என்ற போதும் அணுஉலைகள் இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீட்டர் வரை வசிப்போர் காலி செய்து மாற்று இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இன்று மதியம் ஜப்பான் நேரப்படி 3. 40 நிமி‌டம் அளவில் புகுஷிமாவில் உள்ள ஒன்றாம் நம்பர் பிளாண்டில் பெரும் சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சீர் செய்யும் பணியில் இருந்த 4 பேர் காயமுற்றதாக ஜப்பானில் இருந்து வரும் செய்திகள் கூறப்படுகிறது. இந்த வெடிப்பின் காரணமாக எந்த அளவிற்கு சேதம் இருக்கும் என நிர்மாணிக்க முடியவில்லை. முன்னதாக இங்கு குளிரூட்டும் சாதனங்கள் மூலம் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டதாக ஜப்பான் அரசு முடிவு செய்திருக்கிறது.
நேற்று மதியம் சுனாமி தாக்கியதில் டோக்கியோவையொட்டி பல்வேறு தீவுப்பகுதிகள் மூழ்கின. கடலோரத்தில் இருந்த துறைமுகங்கள், வீடுகள் முற்றிலும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காத்திருந்த புத்தம், புது கார்கள் ஆயிரக்கணக்கில் கடலில் குப்பைகள் போல சென்றன. 3 ரயில்கள் காணவில்லை. இதில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.
சுனாமி ஏற்பட்டு சேதத்தில் சிக்கி தவிப்போரை மீட்கள் ஆயிரக்கணக்கான மீட்பு படையினர் ஈடுபட்டுள்னர். விமானம், கப்பல் , மற்றும் வாகனங்களில் சென்று ஆங்காங்கே உயிருக்கு போராடி வருவோரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்து 600 பேர் இறந்திருக்கலாம் என்று ஜப்பானில் வெளியாககும் ஒரு இணையதளம் கூறியிருக்கிறது. இன்றும் காலையில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.
அணுமின் கசிவு அதிகாரிகள் விளக்கம்: புகுஷிமாவில் அணு மின் நிலையம் உள்ள பகுதியில் சற்று வாயு பரவியிருப்பதாக தெரிகிறது. இது குறித்து அணு மைய அதிகாரிகள் கூறுகையில்; சுனாமி காரணமாக இங்குள்ள 5 அணு உலைகளில் 1 சேதமடைந்திருக்கிறது. இதனால் அழுத்தம் காரணமாக இது அணு வெப்ப வாயு கசிந்துள்ளது. அணு கதிர் எதுவும் வெளியேறவில்லை. இது பெரும் ஆபத்து இல்லை இருப்பினும் 10 கி.மீட்டர் வரை வசிப்போர்கள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
அவசர நிலை பிரகடனம்: இந்தப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு வசிப்போர‌ை விமானம் மூலம் மீட்டு மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அணுவை பிளப்பதன் மூலம் ஏற்படும் வெப்பமூட்டும் கருவி வழக்கத்தை விட ஆயிரம் மடங்கு வெப்பம் வெளியேறி வருகிறது. இதனை கூல் செய்யும் நிலையில் உள்ள கருவிகள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யவில்லை இதனால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Thanks for dinamalar

No comments:

Post a Comment