Wednesday, 23 March 2011

Actress Elizabeth Taylor has died



பழம்பெரும் ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் இன்று மரணமடைந்தார். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த டெய்லர் இன்று லாஸ் ஏஞ்சலெஸில் மரணமடைந்தார்.
showMoneyQuotes();
கடந்த 2001ம் ஆண்டு முதலே வெளியுலகில் தலை காட்டாமல் இருந்து வந்தார் டெய்லர். அந்த ஆண்டு அவர் நடித்த டிவி திரைப்படமான ஓல்ட் பிராட்ஸ்-ஏ அவர் நடித்த கடைசிப் படமாகவும் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு இதய நோய் உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் இருந்து வந்தன. கடந்த 1960ல் வெளியான பட்டர்பீல்ட் 8 படத்திற்காகவும், பின்னர் 1966ம் ஆண்டு நடித்த ஹூஸ் அப்ரைட் ஆப் விர்ஜீனியா உல்ப் படத்தில் நடித்ததற்காகவும் ஆஸ்கர் விருது பெற்றவர் டெய்லர். 12 வயதில் அவர் நடித்த நேஷனல் வெல்வெட் என்ற படம் அவருக்கு மிகப் பெரிய அந்தஸ்தைத் தேடிக் கொடுத்தது. கிளியோபாட்ரா படம் எலிசபெத்தை புகழேணியின் உச்சியில் அமர வைத்தது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற கலைஞர்கள் வரிசையில் எலிசபெத்துக்கு தனி இடம் உண்டு.அவருடைய நடிப்பைப் போலவே கவர்ச்சியும் பிரமாண்டமாக பேசப்பட்டது. அதேபோல எட்டு முறை கல்யாணம் செய்து விவாகரத்து செய்த அவரது ஸ்டைலும் பரபரப்பை ஏற்படுத்தியவையாகும். அதில் ரிச்சர்ட் பர்டனை இரண்டுமுறை கல்யாணம் செய்து, இரண்டு முறை விவாகரத்தும் செய்து சாதனை படைத்தார் எலிசபெத்.கடந்த 2004ம் ஆண்டு அவருக்கு இதயக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2009ல் அவருக்கு அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த நிலையில் தனது உடல் நலக் கோளாறுகள் காரணமாக எலிசபெத் மரணத்தைத் தழுவியுள்ளார்.
Thanks for thatstamil

No comments:

Post a Comment