Friday, 11 March 2011

ஹீரோ ஹோண்டாவுக்கு புதிய பிராண்டு உருவாக்கும் லண்டன் நிறுவனம்



டெல்லி: ஹீரோ ஹோண்டாவுக்கு புதிய பிராண்டு மற்றும் சின்னம் வடிவமைக்கும் பணிகள் லண்டனை சேர்ந்த பிரபல லோகோ வடிவமைப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
showMoneyQuotes();
ஹீரோ ஹோண்டா கூட்டு குழுமத்திலிருந்து ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விலகியது. இதையடுத்து, புதிய பிராண்டு பெயரில் பைக்குகளை அறிமுகப்படுத்த ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


இதற்காக, புதிய பிராண்டு மற்றும் சின்னத்தை(லோகோ) வடிவமைக்கும் பணிகள் லண்டனை சேர்ந்த பிரபல வோல்ஃப் ஆலின்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வோல்ஃப் ஆலின்ஸ் நிறுவனம் லோகோ உருவாக்குவதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனமாகும்.


இந்தியாவில் டாடா டொகோமோ மற்றும் ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனங்களின் புதிய லோகோவை வோல்ஃப் ஆலின்ஸ் நிறுவனம் வடிவமைத்து கொடுத்தது. மேலும், அசோக் லேலண்டின் புதிய லோகோவையும் வோல்ஃப் உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஹீரோ ஹோண்டா தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:


"ஹோண்டா பிரிவையடுத்து ஹீரோவின் புதிய பிராண்டில் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், மோட்டார்சைக்கிள்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கு புதிய அடையாளம் தேவைப்படுகிறது.


இதற்காக, புதிய பிராண்டு பெயர் மற்றும் சின்னத்தை வடிவமைக்கும் பணிகள் லண்டனை சேர்ந்த வோல்ஃப் ஆலின்ஸ் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹீரோவின் கொள்கைகள் மற்றும் தரத்தை பறைசாற்றும் வகையில் புதிய பிராண்டு இருக்கும். இதன்மூலம், ஹீரோ நிறுவனம் புதிய அத்யாத்தில் அடி எடுத்து வைக்கும்," என்று கூறினார்.
Thanks for thatstamil

No comments:

Post a Comment