டெல்லி: உற்பத்தியை இரு மடங்கு உயர்த்தும் வகையில் ஹரியானாவில் மேலும் ஒரு புதிய தொழிற்சாலை அமைக்க மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமி்ட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக மாருதி சுஸுகி நிறுவனம் ஹரியானாவிலுள்ள குர்கான் மற்றும் மானேசரில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த இரு தொழிற்சாலைகளும் ஆண்டுக்கு 12 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவையாக உள்ளன.
மேலும், மானேசரில் உள்ள தொழிற்சாலையை ரூ.2,000 முதலீட்டில் மாருதி நிறுவனம் விரிவுபடுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, உற்பத்தியை இரு மடங்கு உயர்த்தும் வகையில் மேலும் ஒரு புதிய தொழிற்சாலையை ஹரியானா மாநிலம்
ரோத்டாக்கில் நிறுவுவதற்கு மாருதி நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோத்டாக்கில் ஏற்கனவே உள்ள வடிவமைப்பு ஆராய்ச்சிப் பிரிவையொட்டிய பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்சாலையை பிரம்மாண்டமாக நிறுவுவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய தொழிற்சாலை ஆண்டுக்கு 6 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
சந்தையின் நிலவரத்தை கருத்தில்கொண்டு, இதுகுறித்த முடிவை மாருதி நிறுவனம் இன்னும் ஓர் ஆண்டுக்குள் எடுக்கும் என்றும் ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Thanks for Thatstamil
No comments:
Post a Comment