Friday, 25 March 2011

Bajaj re-launch Boxer coming soon


டெல்லி: வரும் ஜூலை மாதம் பாக்சர் பைக்கை மீண்டும் களமிறக்க பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
showMoneyQuotes();
கடந்த 1997 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாக்சர் பைக் பஜாஜ் நிறுவனத்தின் அடையாளச் சின்ன மாடல்களில் ஒன்றாக மாறியது. வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமாக இருந்த பாக்சர் பைக் உற்பத்தியை பஜாஜ் நிறுவனம் திடீரென நிறுத்திவிட்டது.இந்நிலையில்,சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்கும் விதமாக பாக்சர் பைக்கை மீணடும் சந்தையில் களமிறக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பாக்சர் வடிவமைப்பில் மாற்றங்களுடன் வரவுள்ளது.125 சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால், செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தில் பாக்சர் பஜாஜ் பெயரை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ ஹோண்டா சூப்பர் ஸ்பிளண்டர், ஹோண்டா ஷைன் மற்றும் சுஸுகியின் சிலிங் ஷாட் உள்ளிட்ட 125 சிசி ரக பைக்குகளுக்கு புதிய பாக்சர் கடும் போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.பல புதிய மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பாக்சர் ரூ.44,000 விலை கொண்டதாக இருக்கலாம் என்று ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Thanks for Thatstamil

No comments:

Post a Comment