கொழும்பு, ஜூலை 9- இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைக்க விடுதலைப் புலிகள் முயற்சி செய்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பிரீஸ் கூறியுள்ளார்.
நேற்று, நாடாளுமன்றத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
"விடுதலைப் புலிகள் தங்களுக்கே உரிய பொருளாதார மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இலங்கையை அதலபாதாளத்தில் தள்ளிவிடும் நோக்கத்தில் சர்வதேச தொடர்புகளை பயன்படுத்தி, இந்நாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிகளை எடுத்து வருகின்றனர்." என்று ஜி.எல். பிரீஸ் கூறியதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன
Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts
Saturday, 9 July 2011
Saturday, 12 March 2011
ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம்

டோக்கியோ: ஜப்பானை புரட்டிப்போட்டு நிலைகுலைய செய்துள்ள நிலையில் இங்குள்ள அணு மின் மையத்தில் இருந்து அழுத்தம் காரணமாக வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இது பெரும் அச்சம் தரும் விஷயமல்லை என்ற போதும் அணுஉலைகள் இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீட்டர் வரை வசிப்போர் காலி செய்து மாற்று இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இன்று மதியம் ஜப்பான் நேரப்படி 3. 40 நிமிடம் அளவில் புகுஷிமாவில் உள்ள ஒன்றாம் நம்பர் பிளாண்டில் பெரும் சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சீர் செய்யும் பணியில் இருந்த 4 பேர் காயமுற்றதாக ஜப்பானில் இருந்து வரும் செய்திகள் கூறப்படுகிறது. இந்த வெடிப்பின் காரணமாக எந்த அளவிற்கு சேதம் இருக்கும் என நிர்மாணிக்க முடியவில்லை. முன்னதாக இங்கு குளிரூட்டும் சாதனங்கள் மூலம் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டதாக ஜப்பான் அரசு முடிவு செய்திருக்கிறது.
நேற்று மதியம் சுனாமி தாக்கியதில் டோக்கியோவையொட்டி பல்வேறு தீவுப்பகுதிகள் மூழ்கின. கடலோரத்தில் இருந்த துறைமுகங்கள், வீடுகள் முற்றிலும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காத்திருந்த புத்தம், புது கார்கள் ஆயிரக்கணக்கில் கடலில் குப்பைகள் போல சென்றன. 3 ரயில்கள் காணவில்லை. இதில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.
சுனாமி ஏற்பட்டு சேதத்தில் சிக்கி தவிப்போரை மீட்கள் ஆயிரக்கணக்கான மீட்பு படையினர் ஈடுபட்டுள்னர். விமானம், கப்பல் , மற்றும் வாகனங்களில் சென்று ஆங்காங்கே உயிருக்கு போராடி வருவோரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்து 600 பேர் இறந்திருக்கலாம் என்று ஜப்பானில் வெளியாககும் ஒரு இணையதளம் கூறியிருக்கிறது. இன்றும் காலையில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.
அணுமின் கசிவு அதிகாரிகள் விளக்கம்: புகுஷிமாவில் அணு மின் நிலையம் உள்ள பகுதியில் சற்று வாயு பரவியிருப்பதாக தெரிகிறது. இது குறித்து அணு மைய அதிகாரிகள் கூறுகையில்; சுனாமி காரணமாக இங்குள்ள 5 அணு உலைகளில் 1 சேதமடைந்திருக்கிறது. இதனால் அழுத்தம் காரணமாக இது அணு வெப்ப வாயு கசிந்துள்ளது. அணு கதிர் எதுவும் வெளியேறவில்லை. இது பெரும் ஆபத்து இல்லை இருப்பினும் 10 கி.மீட்டர் வரை வசிப்போர்கள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
அவசர நிலை பிரகடனம்: இந்தப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு வசிப்போரை விமானம் மூலம் மீட்டு மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அணுவை பிளப்பதன் மூலம் ஏற்படும் வெப்பமூட்டும் கருவி வழக்கத்தை விட ஆயிரம் மடங்கு வெப்பம் வெளியேறி வருகிறது. இதனை கூல் செய்யும் நிலையில் உள்ள கருவிகள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யவில்லை இதனால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Thanks for dinamalar
Friday, 11 March 2011
கடும் நிலநடுக்கம்: ஜப்பானை சுனாமி தாக்கியது

வடகிழக்கு ஜப்பானில் 8.9 என்ற ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜப்பானின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று சுனாமி தாக்கியது.
இதனால் யாரும் உயிரிழந்தார்களா என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் இல்லை. எனினும் கடற்கரைச் சாலைகளில் ஏராளமான கார்கள் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டன.
8.9 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வுமையம் தெரிவித்தது. டோக்கியோவுக்கு வடகிழக்கே 230 மைல்கள் தொலைவில் 15 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து ஜப்பான், ரஷ்யா, மார்கஸ் தீவு மற்றும் வடக்கு மரியானாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.
ஏராளமான கார்கள், கட்டடங்கள், படகுகள் உள்ளிட்டவை கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. நிலநடுக்கத்தால் பல இடங்களில் தீவிபத்தும் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசுபிக்கின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
கயாம், தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் அமெரிக்காவின் ஹவாயிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்காண மைல்கள் தொலைவில் உள்ள டோக்கியோவில் கட்டடங்கள் பலமாக அதிர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட 30 நிமிடங்களுக்குப் பின்னரும் டோக்கியோவில் உள்ள உயரமான கட்டடங்கள் அதிர்ந்துகொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு செல்போன் தொடர்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டன.
டோக்கியோவில் உலகின் மிகவும் பரபரப்பான ஷின்ஜுகு நிலையத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுவிட்டனர். ரயில்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன.
டோக்கியோவின் முக்கிய விமானநிலையம் மூடப்பட்டது.
இது மிகவும் அரிதான நிலநடுக்கம், சேதங்கள் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரிக்கலாம் என ஜப்பான் பேரிடர் மேலாண்மை மையத்தின் அலுவலர் ஜூனிச்சி சவதா தெரிவித்தார்.
ஜப்பான் நேரப்படி பிற்பகல் 2.46 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் 5 சக்திவாய்ந்த நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. அதன் அளவீடுகள் 7.1 என்ற ரிக்டர் அளவில் இருந்தன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 என்ற அளவில் இருந்தது. எனினும் 8.4 ரிக்டர் அளவில் இருந்ததாக ஜப்பான் தெரிவித்தது.
டோக்கியோவின் ஒடைமா மாவட்டத்தில் பெரிய கட்டடம் ஒன்று தீப்பிடித்து, புகைமண்டலமாக காட்சி அளித்தது. மத்திய டோக்கியோவில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அனைவரும் பிளாட்பார்ம்களில் நடந்துசென்றனர்.
டோக்கியோவிலும், புறநகரிலும் 40 லட்சத்துக்கும் மேலான கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
Thanks for dinamani
Thursday, 10 March 2011
அதிமுக கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 2 தொகுதிகள்!

சென்னை: நாடார் சங்கங்களை எல்லாம் ஒரே அணிக்குக் கொண்டு வந்ததன் மூலம் புதிய பலம் பெற்றுள்ள சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுகவுடன் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது.
சரத்குமாரின் கட்சிக்கு அதிமுகவில் 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சரத்குமார் சந்தித்துப் பேசியபோது இந்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த 2 தொகுதிகள் எவை எவை என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தற்போது சமத்துவ மக்கள் கட்சியும், அதிமுக கூட்டணியில் இடம்பெறுகிறது. இந்தக் கட்சியின் கீழ், அனைத்து நாடார் சங்கங்களும் ஒருங்கிணைந்துள்ளன. இதற்காக அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன் சமத்துவ மக்கள் கட்சி தொகுதி பங்கீட்டு குழுவினர் நடத்தினர்.அப்போது தங்களுக்கு 7 தொகுதிகள் வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி கோரியது. ஆனால், 2 தொகுதிகளை மட்டும் அதிமுக ஒதுக்கியுள்ளது.முன்னதாக சரத்குமார் நேற்று கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மாநில நிர்வாகிகள் அனைவரும் 4 அல்லது 5 தொகுதிகளை பெற்றுக் கொண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதன் அடிப்படையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இன்று மாலை போயஸ் கார்டனில் சந்தித்தார் சரத்குமார். அப்போது 2 தொகுதிகள் என்று முடிவானது. அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அரசியலில் புகுந்தவர் சரத்குமார். உண்மையில் அவரது நாட்டாமைப் படம்தான் அவரது அரசியல் பிரவேசத்திற்குக் காரணம் எனலாம். அந்தப் படத்தை அப்போது ஜெயா டிவி தடாலடியாக ஒளிபரப்ப கோபமடைந்த சரத்குமார் திமுகவில் இணைந்தார்.அதன் பின்னர் திமுகவில் ராஜ்யசபா எம்.பியாக்கப்பட்டார். இருப்பினும் அதற்கு மேல் அவருக்கு கட்சியில் முன்னேற்றம் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியை விட்டு விலகினார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதாவை தேடிப் போய் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.பின்னர் அதே வேகத்தில் கட்சியை விட்டும் விலகி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார். இப்போது அதிமுக கூட்டணியில் இணைந்து 2 தொகுதிகளைப் பெற்றுள்ளார்.
இதன்மூலம் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக இதுவரை 51 தொகுதிகளை ஒதுக்கிவிட்டது. தேமுதிக 41, மனிதநேய மக்கள் கட்சி 3, சமத்துவ மக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 2, சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1, பார்வர்டு பிளாக் 1, இந்திய குடியரசுக் கட்சி 1 என கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன.
ஆனால், இவர்களுக்கு முன்பிருந்தே அதிமுக கூட்டணியில் உள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
Thanks for thatstamil
Monday, 7 March 2011
ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு, ராஜினாமா நாளை வரை ஒத்திவைப்பு
After a two-day deadlock over seat sharing, DMK and Congress on Monday reopened channels of communication. The rapprochement came after Union finance minister Pranab Mukherjee spoke to DMK leader M Karunanidhi on Monday twice through phone. Pranab, who called DMK leader TR Baalu's mobile phone to talk to Karunanidhi, sought some more time to set things right. Karunanidhi agreed to put on hold the resignations of his ministers, but maintained that the Congress could not be given more than the 60 allotted seats.
Thanks for thatstamil
Tuesday, 1 March 2011
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்!-மே 13ல் தான் 'ரிசல்ட்'!!

டெல்லி:
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.அதே போல புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. ஆனால், நக்ஸல் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் ஆறு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. அதே போல அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய சட்டசபை அமைக்கப்பட்டாக வேண்டும்.ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை:இதையடுத்து ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாகத் தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஓட்டுப் பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு வெளியாகப் போவது இதுவே முதல் முறையாகும். மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத வகையில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகத்தின் வாக்கு எண்ணிக்கை வெகுவாக தள்ளிப் போயுள்ளது.தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இன்று கூடி இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தினர். இதையடுத்து மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தேர்தல் தேதிகளை அறிவித்தனர்.4.59 கோடி வாக்காளர்கள்:தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையி்ல், தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்களும் புதுச்சேரியில் 80 லட்சம் வாக்காளர்களும் உள்ளன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தான் ஓட்டுப் பதிவு நடைபெறும். முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.மார்ச் 19ல் மனு தாக்கல் தொடக்கம்:தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. மனுக்கள் பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30.ஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும். தமிழகத்தில் 99.98 சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டித்தான் வாக்களிக்க வேண்டும். அது இல்லாதவர்களுக்கு மாற்று ஆவணங்களை அறிவித்துள்ளோம்.இந்த தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதல் முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.இதேபோல கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. பீகார் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சியினர் சோதனையிட அனுமதிக்கப்பட்டது. அதே நடைமுறை இந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் பின்பற்றப்படும் என்றார்.தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்-புதுச்சேரி தேர்தல் அட்டவணை:
வேட்பு மனு தாக்கல்- மார்ச் 19
மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்- மார்ச் 26
மனுக்கள் பரிசீலனை- மார்ச் 28
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்- மார்ச் 30
வாக்குப் பதிவு- ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை- மே 13
Thanks for Thatstamil
Subscribe to:
Posts (Atom)