கொழும்பு, ஜூலை 9- இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைக்க விடுதலைப் புலிகள் முயற்சி செய்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பிரீஸ் கூறியுள்ளார்.
நேற்று, நாடாளுமன்றத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
"விடுதலைப் புலிகள் தங்களுக்கே உரிய பொருளாதார மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இலங்கையை அதலபாதாளத்தில் தள்ளிவிடும் நோக்கத்தில் சர்வதேச தொடர்புகளை பயன்படுத்தி, இந்நாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிகளை எடுத்து வருகின்றனர்." என்று ஜி.எல். பிரீஸ் கூறியதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன