Monday, 4 April 2011

புதிய பைக்குகளை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டம்


புதுடில்லி: அடுத்த ஆண்டு 1000 சிசி திறனுக்கும் குறைவான பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. சொகுசு கார் தயாரிப்பில் புகழ்வாய்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் சூப்பர் பைக்குகள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் 1000 சிசி ரக சூப்பர் பைக்குகளை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது. கடந்த மூன்று மாதங்களில் இதுவரை 15 பைக்குகள் விற்பனையாகி உள்ளன. இந்நிலையில், பைக் விற்பனையை அதிகரிக்கும் வகையில், அடுத்த ஆண்டு 1000 சிசிக்கும் குறைவான பைக் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

Thanks for dinamalar

No comments:

Post a Comment